உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

திருப்பூர்; திருப்பூரில், மனைவியுடன் தகராறு செய்த வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சபீக் அகமது, 18. இவர் திருப்பூர் எம்.எஸ்.நகர் கருப்பராயன் கோவில் அருகில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 3 மாதம் முன் பெண் ஒருவரை திருமணம் செய்தார். மனைவி ஊரில் இருக்க, கணவர் திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மனைவியிடம் மொபைல் போனில் பேசியபோது, தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரத்தில், தங்கியிருந்த வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ