உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / காதலியின் கருவை கலைத்து ஏமாற்றிய காதலன் கைது

காதலியின் கருவை கலைத்து ஏமாற்றிய காதலன் கைது

திருவண்ணாமலை: கர்ப்பமான காதலியை ஏமாற்றி, கருவை கலைத்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீஸார் கைது செய்தனர். செங்கம் அடுத்த சி.சொர்ப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சாந்தி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (26). இவர்கள் இருவரும், மூன்றாண்டாக காதலித்து வந்தனர். பாக்யராஜ், சாந்தியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், கர்ப்பமடைந்த சாந்தி, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு பாக்கியராஜை வற்புறுத்தினார். பாக்யராஜின் தந்தை அன்பழகன், அக்கா சங்கீதா, தங்கை ரேகா, மாமா சேகர், உறவினர் வெண்ணிலா ஆகியோர், 'கருவை கலைத்தால்தான் திருமணம் செய்து வைப்போம்' எனக் கூறியுள்ளனர். அதே கிராமத்தில் உள்ள நாட்டு வைத்தியர் கவுஞ்சியம்மாள் (80) என்ற மூதாட்டியிடம் அழைத்துச் சென்று, கருவை கலைத்துள்ளனர். அதன் பின், 10 பவுன் நகை மற்றும் பைக் தந்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பாக்யராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி, செங்கம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, பாக்யராஜை கைது செய்தனர். தலைமறைவான அன்பழகன், சங்கீதா, ரேகா, சேகர், வெண்ணிலா மற்றும் கவுஞ்சியம்மாளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்