உள்ளூர் செய்திகள்

போலி டாக்டர் கைது

கிருஷ்ணகிரி : சிங்காரப்பேட்டை அருகே, ஊசி போட்டதில் விவசாயி இறந்ததால், சிகிச்சை அளித்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காமராஜர் நகரை சேர்ந்தவர் பாபு, 27, விவசாயி. ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, தன் மனைவியுடன் சிங்காரப்பேட்டை அடுத்த எட்டிபட்டிக்கு வந்தார். அங்கு 'மெடிக்கல்ஸ்' நடத்தி வரும் மனோஜ், 45 என்பவரிடம், ஊசி பேட்ட பின், வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில், பாபு மயங்கி விழுந்து இறந்தார். மனோஜிற்கு தவறான சிகிச்சை அளித்ததே இறப்புக்கு காரணம் என, உறவினர்கள் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், பி.ஏ., வரலாறு பட்டப்படிப்பு மட்டு‍மே படித்த மனோஜ், 'மெடிக்கல்ஸ்' நடத்தியதும், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, போலி டாக்டர் மனோஜை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி