உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் வாலிபருக்கு போலீஸ் வலை

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் வாலிபருக்கு போலீஸ் வலை

வந்தவாசி:வந்தவாசி அருகே, 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஆயிலவாடியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் அருண்குமார், 22. இவருக்கு, 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை தனிமையில் இருந்தார். கடந்த, 22ல் மாணவிக்கு உடல்நிலை பாதித்ததால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி, 2 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, தலைமறைவான அருண்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி