உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.19 லட்சம் நுாதன மோசடி

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.19 லட்சம் நுாதன மோசடி

தண்டராம்பட்டு,:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு யூனியனில், 2019 -- 2023 வரை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீட்டிற்கு 2.70 லட்சம் ரூபாயை, வீடு கட்டும் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நான்கு தவணையாக, பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ., இன்ஜினியர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் அடையாள எண் வாயிலாக, ஓ.டி.பி., எண் அனுப்பி, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர்.தண்டராம்பட்டு யூனியன் அலுவலக தற்காலிக ஊழியர் சூர்யா, அலுவலக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி, வீடு கட்டும் பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பாமல், நண்பர்களின் கணக்கிற்கு, 19 லட்சம் ரூபாய் அனுப்பி மோசடி செய்துள்ளார்.அவர் இடமாறுதலாகி சென்றதால், புதிதாக வேறு ஒருவர் பணியில் சேர்ந்து, கணக்கை சரிபார்த்த போது, இந்த மோசடி தெரிய வந்தது. சூர்யா தலைமறைவானார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்