உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சொத்து தகராறில் அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற 2 தம்பிகள் கைது

சொத்து தகராறில் அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற 2 தம்பிகள் கைது

ஆரணி:ஆரணி அருகே சொத்து தகராறில், அண்ணன் தலையில் கல்லைபோட்டு கொன்ற, 2 தம்பிகளை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சின்னபுத்துாரை சேர்ந்தவர் விவசாயி மகேஸ்வரன், 60; இவரது மகன்கள், பாஸ்கரன், 39, ஜெயகிருஷ்ணன், 35, வெங்கடேசன், 33, ஆகியோர் திருமணமாகி தனித்தனியாக வீடு கட்டி வசிக்கின்றனர். இதில், வீட்டுமனை தகராறு தொடர்பாக, 3 பேருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, மூவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது பாஸ்கரனை, அவரது தம்பிகள், ஜெயகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர், ஓட ஓட விரட்டிச் சென்று தாக்கினர். இதில் மயங்கி விழுந்த பாஸ்கரன் தலையில், இரு தம்பிகளும் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பினர். அவர்களை கண்ணமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ