உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மரத்தில் கார் மோதி 3 பேர் பரிதாப பலி

மரத்தில் கார் மோதி 3 பேர் பரிதாப பலி

போளூர்:ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பெண்குறைபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதரூர், 49. இவரது மனைவி கல்யாணி, 33. மகன் பின்கா ராமச்சந்திரன், 11; மகள் ஸ்ரீரிதிஷா, 8. இவர்களது உறவினர் ரவி, 24, மற்றும் ஈஸ்வரி, 62. இவர்கள் ஆறு பேரும் நேற்று அதிகாலை 4:00 மணியளவில், 'மாருதி ஆல்டோ 800' காரில், திருவண்ணாமலை நோக்கி சென்றனர். காரை சசி தரூர் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் கிராமம் அருகே, நிலை தடுமாறிய கார் சாலையோர மரத்தில் மோதியதில், கல்யாணி, ஸ்ரீரிதிஷா, ரவி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற மூவரும் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை