உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பைக் மீது லாரி மோதி மகன் கண் முன் தாய் பலி

பைக் மீது லாரி மோதி மகன் கண் முன் தாய் பலி

வந்தவாசி:வந்தவாசி அருகே, பைக் மீது லாரி மோதியதில், மகன் கண்ணெதிரே தாய் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எஸ்.மோட்டூரைச் சேர்ந்தவர் மண்ணு, 48, விவசாயி. இவர் மனைவி பரமேஸ்வரி, 41. இவர்களது மகன் கமலேஷ், 17. இவரை மேல்மருவத்துாரிலுள்ள தனியார் கல்லுாரியில் சேர்க்க பரமேஸ்வரி, மகன் கமலேஷுடன், 'ஹோண்டா' பைக்கில் நேற்று முன்தினம் மதியம் சென்றார்.கமலேஷ் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினார். வந்தவாசி - மேல்மருவத்துார் பைபாஸ் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியதில், பரமேஸ்வரி பைக்கிலிருந்து துாக்கி வீசப்பட்டு லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.கீழ்கொடுங்காலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ