உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / காதலியை திருமணம் செய்த இரண்டு நாளில் வாலிபர் சாவு

காதலியை திருமணம் செய்த இரண்டு நாளில் வாலிபர் சாவு

போளூர் : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சொரக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி தமிழரசன் மகன் அஜீத், 23, தனியார் வங்கி ஊழியர். இவருக்கும் சென்னை ஒரகடம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும், ஊட்டியை சேர்ந்த ஜான்சன் மகள் ராதிகா என்பவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.கடந்த, 3ம் தேதி அந்த பெண்ணுடன் தச்சம்பட்டு நரசிம்மர் கோவிலில், தமிழரசன் திருமணம் செய்து கொண்டார். 5ம் தேதி காலையில், பதிவு திருமணம் செய்து கொள்வோம் என கூறி, புது மனைவியை தன் வீட்டில் விட்டுச் சென்ற அஜீத், வீடு திரும்பவில்லை. இது குறித்து, அவரின் தந்தை தமிழரசன் புகார் படி, ஆரணி தாலுகா போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, போளூர் - ஜமுனாமரத்துார் சாலையில், வனப்பகுதியில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அஜீத் உடலை போலீசார் கைப்பற்றினர். காதலியை திருமணம் செய்த, இரண்டே நாளில் அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை