உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மலையில் ஆனி திருமஞ்சன திருவிழா

தி.மலையில் ஆனி திருமஞ்சன திருவிழா

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்ராயண புண்ணியகாலம் என அழைக்கப்படும், தை முதல் ஆனி வரை ஆறு மாதங்களில், ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தில், ஆனி திருமஞ்சன சிறப்பு அபிேஷகம் நடத்தப்படும்.அதன்படி நேற்று, ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நடராஜர், சிவகாமி அம்மன், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர், அங்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு, திருமஞ்சன சிறப்பு அபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது.ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் மாட வீதி உலா வந்து நடராஜர், சிவகாமி அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை