மேலும் செய்திகள்
அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி
13 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
05-Oct-2025
செங்கம்:செங்கம் அருகே, மானியத்தில் டிராக்டர் பெற்று தருவதாக மோசடி செய்தவரை தட்டிக்கேட்ட, விவசாயி தாக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தத்தை சேர்ந்தவர், மா.கம்யூ., பிரமுகர் ராஜா, 54, விவசாயி; இவர் உட்பட, 8 விவசாயிகளிடம், கடந்த, 2017 ல், 15,000 ரூபாய் செலுத்தி, மானியத்தில் டிராக்டர் பெறலாம் என, கிருஷ்ணாபுரம் கிராம விவசாயி ராமஜெயம், 55, என்பவர் பணம் பெற்றார். ஆனால் அவர், இதுநாள் வரை டிராக்டர் வாங்கித் தரவில்லை. மேலும், வசூல் செய்த, 1.20 லட்சம் ரூபாயை திருப்பி தரவில்லை. நேற்று முன்தினம் ராஜா போளூர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த ராமஜெயத்திடம், பணத்தை திரும்ப தரக்கேட்டார். அப்போது ராமஜெயம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதில் ராஜா படுகாயமடைந்தார். செங்கம் போலீசார், தலைமறைவான ராமஜெயத்தை தேடி வருகின்றனர்.
13 hour(s) ago
05-Oct-2025