உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / திருவண்ணாமலையில் பிரம்மோற்ஸவம்

திருவண்ணாமலையில் பிரம்மோற்ஸவம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடக்கிறது.சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடியை வரவேற்கும் விதம் ஆனி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. நேற்று காலை இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர், உற்ஸவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின் அருணாசலேஸ்வரர் உடனுறை உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் தங்க கொடிமரம் முன் எழுந்தருளினர். பின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்