மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
9 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
9 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகள் புனிதா, 37. தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தார். அரசு ஆவணத்தில் பெயர் பதிவு செய்யாமல், பிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார். தற்போது, பாஸ்போர்ட், விசா பெற ஆன்லைனில் விண்ணப்பித்தார். இதற்காக பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய கடந்த, 4ம் தேதி ஆரணி தாலுகா அலுவலகம் சென்றார். அலுவலகத்துக்கு வெளியே மனு எழுதி தரும் சேவூரை சேர்ந்த தயாளன், 52, உடனடியாக சான்றிதழ் பெற, 2,000 ரூபாய் கொடுத்தால், தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் பேசி வாங்கித் தருவதாக கூறவே, 2,000 ரூபாயை கொடுத்தார். சில நாட்களுக்குப் பின் அவரை அழைத்து, சான்றிதழும் தந்துள்ளார்.ஆரணி தாலுகா அலுவலக முத்திரைக்கு பதிலாக, செய்யாறு தாலுகா அலுவலக முத்திரை, பொறுப்பு தாசில்தார் கையெழுத்து இருக்கவே, ஆரணி தாசில்தாரிடம் புகார் தெரிவித்தார்.தயாளனை அழைத்து அவர் விசாரித்ததில், தாலுகா அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரியும் மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாரி, 32, என்பவருடன் சேர்ந்து, போலி பிறப்பு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. தாசில்தார் மஞ்சுளா புகாரின் படி, ஆரணி டவுன் போலீசார், தயாளன் மற்றும் மாரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025