உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / வெள்ளத்தில் சிக்கிய முதிய தம்பதியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

வெள்ளத்தில் சிக்கிய முதிய தம்பதியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

செய்யாறு,:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூர், ஜவ்வாதுமலை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக பெய்த கன மழையால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.திருவத்திபுரம் அடுத்த அனப்பத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன், 75. இவரது மனைவி கற்பகம், 67. இருவரும் அப்பகுதியிலுள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்தனர். நேற்று காலை பணிக்கு செல்ல, 70 அடி அகலமுள்ள செய்யாற்றில் இறங்கி, மறு கரைக்கு செல்ல முயன்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், செல்ல முடியாமல் மீண்டும் கரைக்கு திரும்ப முயன்ற போது முடியவில்லை. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களை அதே இடத்தில், மணல் திட்டில் மேடான பகுதியில் நிற்குமாறு கூறி, திருவத்திபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கயிறு கட்டி, ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி தம்பதியை பத்திரமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை