மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
கீழ்பென்னாத்துார் : திருவண்ணாமலை மாவட்டம், சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 47. இவர், ஏந்தல் கிராமத்தில், வேளாண் விஞ்ஞானி, மறைந்த நம்மாழ்வார் பெயரில், நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தார்.துவக்கத்தில், நெல்லுக்கான தொகையை உடனுக்குடன் வழங்கினார். ஏராளமான விவசாயிகள் அவரிடம் நெல் விற்பனை செய்தனர். அவர்களுக்கு ஆறு மாதங்களாக பணத்திற்கு பதிலாக ஜெய்கணேஷ் காசோலை வழங்கினார். அதை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என வந்துள்ளது. ஜெய்கணேஷ் உரிய பதிலளிக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவான ஜெய்கணேஷ், அவர் மனைவி சுதா, 43, ஆகியோரை, கீழ்பென்னாத்துார் போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்து, அவர்களிடமிருந்து, 2.50 லட்சம் ரூபாய், கார் மற்றும் புல்லட் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025