உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / எஸ்.ஐ., சட்டையை பிடித்து ஆபாசமாக பேசிய வக்கீல் கைது

எஸ்.ஐ., சட்டையை பிடித்து ஆபாசமாக பேசிய வக்கீல் கைது

வந்தவாசி:வந்தவாசியில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின் சட்டையை பிடித்து இழுத்த வக்கீலை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சேதாரகுப்பத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 25, சென்னையில் வக்கீல். கடந்த, 12ல் வந்தவாசி டவுன், தேரடி தெருவில் பைக்கில் சென்றார். அங்கு வந்தவாசி தெற்கு போலீஸ் எஸ்.ஐ., ராமு மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அந்த வழியாக, செம்பூரைச் சேர்ந்த மணிகண்டன், 21, என்பவர், மூவருடன் பைக்கில் சென்றார். போலீசார் அவரை மடக்கி அபராதம் விதித்தனர். அங்கு சென்ற வக்கீல் பாலமுருகன், மணிகண்டனுக்கு ஆதரவாக எஸ்.ஐ., ராமுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆபாசமாக பேசி, அவரது சட்டையை பிடித்து இழுத்தார்.வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து, வக்கீல் பாலமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில், வந்தவாசி - ஆரணி சாலையில் கிருஷ்ணாவரம் கூட்ரோடு அருகே அவர் இருப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது.அங்கு சென்று அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, போலீசாரை ஆபாசமாக பேசி தாக்கினார். இதையடுத்து போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை