மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
14 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
14 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
சேத்துப்பட்டு:சேத்துப்பட்டு அருகே, தனியார் பள்ளி பஸ் டிரான்ஸ்பார்மர் மீது மோதி, பஸ் ஸ்டாண்டிற்குள் புகுந்ததால், பயணிகள் அலறியடித்து ஓடினர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பஸ் ஸ்டாண்ட் அருகே பார்க்கிங் பாயின்ட் உள்ளது. அங்கு தனியார் பள்ளி பஸ்களை தினமும் மாலையில் நிறுத்தி வைத்து, மீண்டும் மறுநாள் காலையில் எடுத்து செல்வது வழக்கம். நேற்று காலை, 7:00 மணியளவில், ஆரணி ஸ்ரீ பாலவித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி பஸ்சை, விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வேலு, 55, என்பவர் இயக்கினார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள டிரான்ஸ்பார்மரின் மீது உரசியதில், அது சத்தத்துடன் வெடித்து தீப்பொறி பறந்தது. அந்த பஸ், பஸ் ஸ்டாண்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு பஸ் ஸ்டாண்டிற்குள் புகுந்து, அங்கிருந்த கேபிள் கம்பம் மற்றும் அதன் அருகே நிறுத்தியிருந்த வேன் மீது மோதி நின்றது. அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த பேரூராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று, டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025