மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
18 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
18 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, அக்கா வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு, சீர் செய்ய முடியாத வருத்தத்தில், தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை அடுத்த ஓரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 39, விவசாயி. இவருக்கு மனைவி, மகன், இரு மகள்கள் உள்ளனர். மணிகண்டனின் அக்கா முனியம்மாள் மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழா, கடந்த, 12ல் நடந்தது. அதற்கு சீர்வரிசை செய்ய முடியாமல் மன வருத்தத்தில் இருந்த மணிகண்டன், விஷம் குடித்து விட்டு, நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025