உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அக்காவுக்கு சீர் செய்ய முடியாத தம்பி தற்கொலை

அக்காவுக்கு சீர் செய்ய முடியாத தம்பி தற்கொலை

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, அக்கா வீட்டு புதுமனை புகுவிழாவில், சீர் செய்ய முடியாத வருத்தத்தில் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை அடுத்த ஓரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 39, விவசாயி. இவருக்கு மனைவி, மகன், இரு மகள்கள் உள்ளனர். மணிகண்டனின் அக்கா முனியம்மாள் மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழா, கடந்த 12ம் தேதி நடந்தது.அதற்கு சீர்வரிசை செய்ய முடியாமல் மன வருத்தத்தில் இருந்த மணிகண்டன், விஷம் குடித்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்