மேலும் செய்திகள்
தனியார் பள்ளி பஸ் மோதி பிளஸ் 1 மாணவர் பலி
6 hour(s) ago
பேருந்தில் மூதாட்டியிடம் நகை, பணம் அபேஸ்
07-Oct-2025
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
07-Oct-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சொர்ப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் ராஜவேல், 65; இவரது மனைவி இறந்த நிலையில், இவர் பெயரிலுள்ள வீடு மற்றும் விவசாய நிலத்தை, அவரது மகன் பூபதி, 43, எழுதி வாங்கியுள்ளார். தற்போது அவருக்கு சாப்பாடு கூட போடாமல் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். இதனால், ஊரிலுள்ள கோவில் மற்றும் பொது இடங்களில் தங்கி, பிச்சை எடுத்து வாழும் ராஜவேல், மனமுடைந்து, தன் சொத்துக்களை மகனிடமிருந்து மீட்டு தர வேண்டும் எனக்கேட்டு, கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர். ராஜவேல் தன் கோரிக்கை மனுவை, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 hour(s) ago
07-Oct-2025
07-Oct-2025