உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி

கலசப்பாக்கம்:கலசப்பாக்கம் அருகே, மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த வடகரை நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி, 48. இவர், பழமையான ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், வீட்டில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. முனுசாமி வசதி இல்லாதவர் என்பதால், அதே வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பெய்த மழையால் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததில், முனுசாமி மகள் சுசீதா, 16, இடிபாடுகளில் சிக்கினார். பின்னர் அவரை மீட்டு, போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பலியான சுசீதா அதே பகுதியில் உள்ள பள்ளியில், 10ம் வகுப்பு படித்து முடித்து, பிளஸ் 1 வகுப்புக்கு செல்ல இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை