உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மணல் கடத்தல் இருவருக்கு 3 ஆண்டு சிறை

மணல் கடத்தல் இருவருக்கு 3 ஆண்டு சிறை

திருக்கோவிலுார்: லாரியில் மணல் கடத்திய உரிமையாளர் மற்றும் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.திருவண்ணாமலை மாவட்டம், அரடாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்,42; லாரி உரிமையாளர். அதேபகுதியை சேர்ந்தவர் சதீஷ்,31; டிரைவர். இவர்கள், கடந்த 2018ம் ஆண்டு, செப்டம்பர் 2ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கொடுக்கப்பட்டு, துரிஞ்சல் ஆற்றில் டிப்பர் லாரியில் மணல் கடத்தியபோது, இருவரையும் மணலுார்பேட்டை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் மீதும் திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார், மணல் கடத்திய இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், சதீஷுக்கு ரூ.6,000; ராஜேஷுக்கு ரூ.5,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ