மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
சேத்துப்பட்டு,:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில், பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில், குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, ஆடி அமாவாசையான நேற்று, 188வது ஆண்டாக இந்நிகழ்வு நடந்தது. நுாற்றுக்கணக்கான பெண்கள் அங்கு நடந்த யாக சாலை பூஜையில் பங்கேற்றனர். பிறகு குழந்தை வரம் வேண்டி, பரதேசி ஆறுமுக சுவாமியை நினைத்து வழிபட்டனர். பின், சேலை முந்தானையில் பிரசாதம் பெற்று, அதை கோவில் அருகே உள்ள குளக்கரையில் வைத்து, மண்டியிட்டு சாப்பிட்டனர். இங்கு ஏற்கனவே இவ்வாறு வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்றவர்களும், நேற்று வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025