மேலும் செய்திகள்
போக்சோ குற்றங்கள்
19-Apr-2025
ஆரணி, மே 10ஆரணி அருகே தேனீக்கள் கொட்டி, 20 பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில், ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள விவசாய நிலத்தில், தேன் கூடு கட்டியிருந்தது. இதிலிருந்து தேன் எடுப்பதற்காக நேற்று சிலர் கூட்டை கலைத்தனர். அப்போது ஏராளமான தேனீக்கள் பறந்து, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. மேலும், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளையும் கொட்டியது.தேனீக்கள் கொட்டியதால், விண்ணமங்கலம் மற்றும் பையூர் கிராமத்தை சேர்ந்த சந்திரன், 73, ரமேஷ், 60, தஞ்சியம்மாள், 60, தங்கம், 55, பாஸ்கர், 14, ஏழுமலை, 55, உள்ளிட்ட, 20 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Apr-2025