மரத்தில் பைக் மோதல் மாணவர்கள் 3 பேர் பலி
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம், 17, சின்ன ஒலைப்பாடியைச் சேர்ந்தவர் ராமன், 17, இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 17. மூவரும், வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, 'பல்சர்' பைக்கில், 6:00 மணிக்கு திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில், வேட்டவலத்திலிருந்து தளவாய் குளம் நோக்கிச் சென்றனர்.வழியில், ஆவூர் கிராமம் அருகே, பைக் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில், முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். ராமன், ஜெகதீஷ் இருவரையும், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். செல்லும் வழியில் ராமன் இறந்தார். நேற்று அதிகாலை, ஜெகதீஷ் உயிரிழந்தார்.