உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ரூ.40,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

ரூ.40,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மண்டகொளத்துாரை சேர்ந்த விவசாயி கணேசன், 51, மனைவி முனியம்மாள், 48, ஆகியோர், ஆரணி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அளித்த மனுவின்படி, 2023 நவ., 6ல் அவர்கள் வீட்டு மனைக்கு பட்டா வழங்கப்பட்டது.இதற்கு பரிந்துரைத்த மண்டகொளத்துார் வி.ஏ.ஓ., இருளப்பன், 80,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கணேசன் தரவில்லை.இந்நிலையில், கணேசனுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இதற்கு, கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் பெற, இருளப்பனிடம், அடங்கல் சான்று கேட்டார். அவர், வீட்டுமனை பட்டாவிற்கு தர வேண்டிய, 80,000 ரூபாய் லஞ்சத்தை வழங்கினால், அடங்கல் சான்று தருவதாக கூறினார். முதலில், 40,000 ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.பணம் தர விரும்பாத கணேசன், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாயை கணேசனிடமிருந்து, இருளப்பன் பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை