உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 65 சவரன் திருட்டு

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 65 சவரன் திருட்டு

வந்தவாசி:ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில், 65 சவரன் நகைகள் திருடு போயின. திருவண்ணாமலை மாவட்டம், பொன்னுார் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு, 65; ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவரது மனைவி நிர்மல்குமாரி, 59. இவருக்கு உடல் நலம் பாதிப்பால், கடந்த, 10ல் வீட்டை பூட்டி, சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தனர். நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை, அக்கம் பக்கத்தினர் பார்த்து அப்பாவு மற்றும் பொன்னுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்பாவு, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, 65 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், 9,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. பொன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை