மேலும் செய்திகள்
பள்ளி மாணவனுடன் திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்கு
18 hour(s) ago
மகளை காதலித்த வாலிபரை அடித்து கொன்ற தந்தை சரண்
25-Oct-2025
மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
21-Oct-2025
கிணற்றில் மூழ்கி கபடி வீரர் பலி
20-Oct-2025
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், கிரிவலம் சென்ற ஆந்திர மாநில பெண் பக்தரிடம், நகையை வழிப்பறி செய்து தப்பிய, பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலையிலுள்ள மலையையே, சிவனாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இவர்களின் பாதுகாப்புக்காக, கிரிவலப்பாதையில், 2 கி.மீ., துாரத்திற்கு ஒரு போலீசார் என, 14 கி.மீ., துாரத்திற்கு, தலா, 7 போலீசார் என, 3 ஷிப்டுகளாக, 24 மணி நேரமும் பைக்கில் ரோந்து பணியில் உள்ளனர். கிரிவல பக்தர்கள் பாதுகாப்புக்காகவே, திருவண்ணாமலை மேற்கு போலீஸ் ஸ்டேஷன் புதியதாக திறக்கப்பட்டது. இவ்வளவு பாதுகாப்பு இருந்தும், கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் நகை, பணம் வழிப்பறி சம்பவம் தொடர்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆந்திர மாநிலம், காக்கிநாடாவை சேர்ந்த சாந்தி, 40, என்ற பெண் கிரிவலம் சென்றார். சிங்கமுக தீர்த்தம் அருகே, பைக்கில் வந்த இரு வாலிபர்கள், அவரை வழிமறித்து, அவர் அணிந்திருந்த, 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்து, திருவண்ணாமலை மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
18 hour(s) ago
25-Oct-2025
21-Oct-2025
20-Oct-2025