உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பைக்குகள் மோதல் தந்தை, மகன் பலி

பைக்குகள் மோதல் தந்தை, மகன் பலி

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாபு, 62. இவரது மகன் சிவா, 22. இருவரும், 17ம் தேதி இரவு, 9:00 மணிக்கு ஹோண்டா பைக்கில், திருவண்ணாமலை சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி அருகே, எதிரே வந்தஅடையாளம் தெரியாத பைக் மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.படுகாயமடைந்த இருவரும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அன்று நள்ளிரவு பாபு இறந்தார். மறுநாள் காலை சிவா உயிரிழந்தார். திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ