உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ஆற்றில் மூழ்கி குழந்தை பலி

ஆற்றில் மூழ்கி குழந்தை பலி

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தானகவுன்டன் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல், 30. நேற்று காலை, மனைவி சுகன்யா, குழந்தை லிஷ்வந்த், 3, ஆகியோருடன் பூ பறிக்க தன் விவசாய நிலத்திற்கு சென்றார். தோட்டம் அருகே துாளி கட்டி, குழந்தையை துாங்க வைத்து விட்டு, தம்பதி பூ பறித்துக் கொண்டிருந்தனர். துாக்கம் தெளிந்து எழுந்த குழந்தை, துாளியிலிருந்து இறங்கி, அருகில் உள்ள செய்யாற்றிற்கு நடந்து சென்று, ஆற்று நீரில் மூழ்கியது.சிறிது நேரம் கழித்து குழந்தையை பார்க்க சக்திவேல் சென்றபோது, துாளியில் குழந்தை இல்லை. அருகே செய்யாற்றில் தேடியபோது, அங்கு நீரில் மூழ்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ