மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
27-Mar-2025
போளூர்,: கேளூர், மாட்டு சந்தை சுங்கவரி வசூல் ஏலத்தில், சிண்டிகேட் அமைத்து ஏலம் கேட்டதால் மிகக்குறைந்த தொகைக்கு ஏலம் போனது. அதை ரத்து செய்து, மறு ஏலம் நடத்த, திருவண்ணா-மலை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கேளூர் மாட்டு சந்தை வார சனிக்கிழமையில் கூடுவது வழக்கம். இங்கு, 2025 - 26ம் நிதி ஆண்டுக்கான சுங்கவரி வசூல் ஏலம் கடந்த, 25ம் தேதி கேளூர் பஞ்., அலுவலகத்தில் பி.டி.ஓ., லட்சுமி தலை-மையில் நடந்தது. ஏலத்தின் ஆரம்ப தொகையாக, 30 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நிலையில், 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மிக குறைந்த தொகைக்கு ஏலம் போனதால், கலெக்டர் தர்ப்பகராஜ் விசாரணை நடத்தினார். அதில், கடந்த, 2022 - 23ம் ஆண்டில், 57.56 லட்சம் ரூபாய்க்கும், 2023 - 24ல், 59.76 லட்சம் ரூபாய்க்கும், 2024 - 2025ல், 44.97 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனதும், கடந்த, 3 ஆண்டுகளில் சராசரியாக ஏலத்தொகை, 54.09 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதும் தெரியவந்தது. ஆனால், இந்தாண்டு, ஏலதாரர்கள் சிண்டிகேட் அமைத்து ஏலம் கேட்டதால், குறைவான தொகைக்கு ஏலம் முடிந்தது. அந்த ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் விடவும், அது முடியும் வரை பஞ்., நிர்வாகமே சுங்கவரி வசூல் செய்யவும், கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
27-Mar-2025