உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சமையல் காஸ் கசிந்து விபத்து: பள்ளி மாணவன் உயிரிழப்பு

சமையல் காஸ் கசிந்து விபத்து: பள்ளி மாணவன் உயிரிழப்பு

வந்தவாசி : வந்தவாசி அருகே, சமையல் காஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பள்ளி மாணவன் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வயலுாரை சேர்ந்தவர் தருண் ஆதித்யா, 11. இவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 31ம் தேதி வீட்டில் குளிப்பதற்காக சமையல் காஸ் அடுப்பில், வெந்நீர் காயவைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில், அவரது உடல் முழுவதும் தீப்பிடித்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.தேசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை