லிப்ட் கேட்டு சென்ற தம்பதி டிராக்டர் கவிழ்ந்து உயிரிழப்பு
திருவண்ணாமலை: டிராக்டர் கவிழ்ந்து தம்பதி உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பாதிரி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி குப்பன், 40. இவரது மனைவி பரிமளா, 35. இருவரும் நேற்று முன்தினம் மாலை, வெளியூர் சென்று, வீடு திரும்பினர். மலை கிராமமான மன்சூரைச் சேர்ந்த கோபி, 23, ஓட்டிச் சென்ற டிராக்டரில், 'லிப்ட்' கேட்டு சென்ற போது, டிராக்டரில் குப்பு, 55, என்பவரும் சென்றார். வேடந்தோப்பு கிராமம் அருகே டிராக்டர் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், குப்பன், பரிமளா, டிராக்டர் அடியில் சிக்கி உயிரிழந்தனர். குப்பு, கோபி தப்பினர். ஜமுனாமரத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.