உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மு.க., மாவட்ட நிர்வாகி பட்டப்பகலில் படுகொலை

தி.மு.க., மாவட்ட நிர்வாகி பட்டப்பகலில் படுகொலை

செய்யாறு:செய்யாறு அருகே தி.மு.க., மாவட்ட நிர்வாகி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த உக்கம் பெரும்பாக்கத்தை சேர்ந்த தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திருமலை, 55. இவரது மனைவி முன்னாள் பஞ்., தலைவி பிரபாவதி, 51. திருமலைக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே சில நாட்களுக்கு முன் விரோதம் ஏற்பட்டு, துாசி போலீஸ் ஸ்டேஷனில் புகாரானது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. நேற்று வழக்கு தொடர்பாக, செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, திருமலை புல்லட்டில் மதியம், 1:30 மணி அளவில், உக்கம்பெரும்பாக்கத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல், சோழவரம் கிராமம் அருகே, அவரது கழுத்தின் பின்புறம் வெட்டியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். துாசி போலீசார் உடலை கைப்பற்றி, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை