உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மு.க., முன்னாள் எம்.பி., வேணுகோபால் மரணம்

தி.மு.க., முன்னாள் எம்.பி., வேணுகோபால் மரணம்

திருவண்ணாமலை : தண்டராம்பட்டு அருகே, தி.மு.க., முன்னாள் எம்.பி., வேணுகோபால், நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காட்டாம்பூண்டியை சேர்ந்தவர், தி.மு.க., முன்னாள் எம்.பி., வேணுகோபால், 92; இவர், 1931 நவ., 5ல் பிறந்தார். தன், 21வது வயதில் பஞ்., தலைவராக பதவி வகித்து, பின்பு, தி.மு.க.,வில் சேர்ந்து, திருவண்ணாமலை பஞ்., யூனியன் சேர்மனாக தேர்வு பெற்றார். தொடர்ந்து, 1977 - 1980, 1980 - 84 என, 2 முறை தண்டராம்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.,வும், 1996, 1998, 1999, 2004 ம் ஆண்டுகளில், திருப்பத்துார் தொகுதி எம்.பி.,யாவும், 2009 ல் திருவண்ணாமலை தொகுதி எம்.பி.,யாகவும் இருந்தார்.தி.மு.க.,வின் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவராக கடந்த, 33 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்தார். தன் கிராமத்தில் டீ கடையில், காலை, மாலை, பொதுமக்களோடு அமர்ந்து தேனீர் சாப்பிடும் பழக்கம் கொண்டவர். நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால், திருவண்ணாமலை, தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர், இதய அடைப்பை அகற்ற ஆப்பரேஷன் செய்ய மறுத்து, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.அவரது உடலுக்கு, தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது சொந்த ஊரில் இன்று, உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவருக்கு, மனைவி, 2 மகள், ஒரு மகன் இருந்த நிலையில், மனைவி மற்றும் மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி