உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை

2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை

சேத்துப்பட்டு: இரு குழந்தைகளை கொலை செய்து, தந்தை தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தெள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 44; கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி, 40. இவர்களின் குழந்தைகள் கயல்விழி, 9, நிதர்ஷன், 7. கிருஷ்ணன் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார். பூங்கொடி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் பூங்கொடி, தாய் வீட்டுக்கு சென்றார். குழந்தைகளுடன் கிருஷ்ணன் தனியாக வசித்தார். தீபாவளிக்கு குழந்தைகளுடன் தெள்ளுர் சென்ற கிருஷ்ணன், மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்த அவர், மின்விசிறியில் துாக்கிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். சேத்துப்பட்டு போலீசார் மூவரின் சடலத்தையும் மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை