உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மாஜி பஞ்., தலைவர் கார் மோதி உயிரிழப்பு

மாஜி பஞ்., தலைவர் கார் மோதி உயிரிழப்பு

ஆரணி: ஆரணி அருகே 'மாஜி' பஞ்., தலைவர் கார் மோதி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்துாரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 85; மாஜி பஞ்., தலைவர். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற, ஆரணி சைதாப்பேட்டைக்கு டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று காலை, 10:00 மணியளவில் சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், பலத்த காயமடைந்தார். ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆரணி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி