உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்

போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் நரியம்பேட்டையில், களம்பூர் போலீசார் வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். அப்போது களம்பூர் நோக்கி சென்ற ஒரு காரை சோதனை செய்ய முயன்றனர். கார் நிற்காமல் போலீசார் மீது மோதுவது போல் வந்ததால், போலீசார் சிதறி ஓடி தப்பினர். பிறகு ஒரு கி.மீ., துாரத்துக்கு பைக்கில் விரட்டிச்சென்று காரை மடக்கி பிடித்தனர். காரில் இருவர் இருந்தனர். விசாரணையில் களம்பூர் கைக்கிலாந்தாங்கல் கிராமம் ராஜ்குமார், 26, சுனில்குமார், 26, என தெரிந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வேலுாரில் சிலருக்கு விற்று விட்டு, ஆரணியில் விற்பனை செய்ய, 200 கிராம் கஞ்சா கொண்டு சென்றதாக தெரிவித்தனர். கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை