மேலும் செய்திகள்
தேனீக்கள் கொட்டி 20 பேர் படுகாயம்
10-May-2025
இடி தாக்கி பசுமாடு பலி
15-May-2025
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எஸ்.காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி, 65. இவர், வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை, பால் கறக்க கொட்டகைக்கு சென்றார்.அப்போது, நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல், அதை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து துடித்து கொண்டிருந்தார்.இதைக் கண்ட அவரது பேரன், விக்னேஷ், 27, என்பவர், தாத்தா வாலிப்பு நோயால் துடிப்பதாக எண்ணி, அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், தாத்தா, பேரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
10-May-2025
15-May-2025