மேலும் செய்திகள்
பேச மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது
17-Mar-2025
கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், ஆதமங்கலம் புதுார் அடுத்த கெங்கவரத்தில் வரும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காளை விடும் விழா நடைபெற உள்ளது. இதற்காக, கலசப்பாக்கம் அடுத்த நவாப்பாளையத்திலுள்ள மிருகண்டா அணை அருகே அரசு நிலத்தில், வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினியின் கணவரும், வக்கீலுமான குமரன், 50, தன் ஆதரவாளர்களுடன் ஒரு பொக்லைன் இயந்திரம், மூன்று டிராக்டர்களை கொண்டு வண்டல் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஆதமங்கலம் புதுார் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன், அங்கு சென்று, மண் அள்ளிய இயந்திரம், டிராக்டர்களை பறிமுதல் செய்தார். ஆத்திரமடைந்த குமரன், பொக்லைன் இயந்திரம் முன் பைக்கை நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். மேலும், எஸ்.ஐ., நாகராஜனை தாக்கினார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., சுதாகர், நேரில் விசாரணை நடத்தினார். பின், குமரனை போலீசார் கைது செய்தனர். அங்கு பதற்றமான நிலை உருவானதால், போலீஸ் ஸ்டேஷன் முன் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
17-Mar-2025