வடமாநில வாலிபர் கொலை: சக தொழிலாளர் 3 பேர் கைது
கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே வடமாநில வாலிபரை, அடித்து கொலை செய்த சக தொழிலாளர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு வனப்பகுதியில், கொலை செய்யப்பட்ட நிலையில், ஆண் சடலம் நேற்று முன்தினம் கிடந்தது. போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், பீஹார் மாநிலத்தை சேர்ந்த சாந்தன், 28, என்பதும், அவர், துரிஞ்சாபுரம் அடுத்த முனியன்தாங்கல் கிராமத்தில், ஹாலோ பிளாக் கல் அறுக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்ததும் தெரிந்தது. அங்கு சென்று விசாரித்ததில், அவருடன் சக தொழிலாளர்களாக பணிபுரிந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ஷா, 50, ராம்தீன், 38, தசரத்குமார், 20, ஆகியோர், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அடித்து கொன்று, சடலத்தை பைக்கில் எடுத்து சென்று வனப்பகுதியில் வீசியது தெரிந்தது. மூவரையும், கலசப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.