உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / நெய்குட காணிக்கை கவுன்டர் திருவண்ணாமலையில் திறப்பு

நெய்குட காணிக்கை கவுன்டர் திருவண்ணாமலையில் திறப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப நெய் குட காணிக்கை கவுன்டர் திறக்கப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா நவ., 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி, கோவில் கருவறை எதிரில் அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்படுகிறது. விழா நடக்கும் 10 நாட்களும், காலை மற்றும் இரவு விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் வீதி உலா நடத்தப்படும். ஏழாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க, செப்., 24ல், கோவில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடப்பட்டது. தீபத் திருவிழாவில் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். பக்தர்கள் நேர்த்திக்கடனாக நெய் காணிக்கை செலுத்துவது வழக்கம். நெய் காணிக்கை பக்தர்கள் செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் கவுன்டரை கோவில் இணை ஆணையர் பரணி தரன் திறந்து வைத்தார். நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர், 1 கிலோ 250 ரூபாய், அரை கிலோ 150 ரூபாய், கால் கிலோ 80 ரூபாய் என கவுன்டரில் கட்டணம் செலுத்தினால் போதும். கடந்தாண்டு நெய் காணிக்கையாக பக்தர்கள் 2.15 கோடி ரூபாய் செலுத்தியிருந்தனர். இந்த ஆண்டு, 2.50 கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை