உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அண்ணாமலையார் மலையடிவாரம் வீடுகளை அகற்ற எதிர்த்து மறியல்

அண்ணாமலையார் மலையடிவாரம் வீடுகளை அகற்ற எதிர்த்து மறியல்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை அடிவாரத்தில், 25,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெஞ்சல் புயல், மழை காரணமாக, திருவண்ணாமலையில், கடந்த, 1ம் தேதி அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராட்சத பாறை உருண்டு வந்து மலை அடிவாரத்தில், வ.உ.சி., நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது.வீட்டினுள் இருந்த, ஏழு பேர் பலியாகினர். இதை தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, முதற் கட்டமாக வருவாய் துறை சார்பில், 1,535 வீட்டின் உரிமையாளர்களுக்கு, வீடுகளை காலி செய்ய விருப்பமா, இல்லையா என கேட்டு, நோட்டீஸ் வழங்கினர்.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சமரசம் செய்து மறியலை கைவிட செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை