உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு போக்சோ

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு போக்சோ

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த முக்குறும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அஜீத்குமார், 29. இவர், 19 வயதுள்ள இரண்டாம் ஆண்டு கல்லுாரி படிக்கும் மாணவியை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றினார். கடந்தாண்டு மாணவி கர்ப்பமானார். அப்போது, அஜீத்குமார் கருவை கலைத்து விடுமாறும், திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதால், கருவை கலைத்தார். பின், திருமணம் செய்ய மறுத்துள்ளார்.மாணவியின் பெற்றோர், அஜீத்குமாரின் பெற்றோரிடம் முறையிட, அஜீத்குமார், உறவினர்கள் ஏழு பேர் சேர்ந்து அவர்களை தாக்கினர். பின், மாணவியின் பெற்றோர் புகார்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, அஜீத்குமாரை போக்சோவில் கைது செய்தனர். மாணவியின் பெற்றோரை தாக்கி தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ