உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மனைவி மீதான ஆத்திரம் மாமனாரை கொன்ற மருமகன்

மனைவி மீதான ஆத்திரம் மாமனாரை கொன்ற மருமகன்

ஆரணி:ஆரணி டவுனை சேர்ந்தவர் பாத்திர வியாபாரி மன்சூர் அலிகான், 31. இவருக்கும், ஆரணி டவுன் பெரியார் நகர், அலுமினிய பாத்திர வியாபாரி ஜமால்பாஷா, 55, என்பவரது மகள் மனிஷாவுக்கும், 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. சில நாட்களுக்கு முன், குடும்ப தகராறால் கணவரை பிரிந்து, தன் தந்தை வீட்டிற்கு மனிஷா சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மாமனார் வீட்டிற்கு சென்ற மன்சூர் அலிகான், குடும்பம் நடத்த வர, மனைவி மனிஷாவை அழைத்தார்.அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த மன்சூர் அலிகான், வீட்டில் துாங்கி கொண்டிருந்த ஜமால்பாஷா தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பினார். ஆரணி டவுன் போலீசார், ஜமால்தீ பாஷாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி