ஆற்றில் மூழ்கி மாணவன் பலி
ஆரணி: ஆரணி அருகே, நாகநதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-யானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி, 56. இவரது மகன் சுனில் ராஜ், 11. அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்-தினம் மாலை, நண்பர்களுடன் வி.ஏ.கே., நகர் பகுதியிலுள்ள நாகநதி ஆற்றில் மீன் பிடிக்க சென்றான்.மீன் பிடித்து விட்டு நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்த-போது நீரில் மூழ்கி பலியானான். இதனை கண்ட நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டனர். வெகு நேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததால் பெற்றோர் தேடினர். இந்நிலையில் நேற்று காலை, நாகநதி ஆற்று வழியாக சென்ற சிலர், சுனில் ராஜ் உடல் ஆற்றில் மிதப்பதை கண்டனர். ஆரணி டவுன் போலீசார் சுனில் ராஜ் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.