உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / திருமணம் நடைபெறவிருந்த ஐ.டி., ஊழியர் விபத்தில் பலி

திருமணம் நடைபெறவிருந்த ஐ.டி., ஊழியர் விபத்தில் பலி

செஞ்சி:திருவண்ணாமலை, வேங்கிகால் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் மகன் செல்வகுமார், 30; பி.இ., பட்டதாரி. சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தார். வரும் 21ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தன், 'யமஹா' பைக்கில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12:30 மணிக்கு ஆலம்பூண்டி அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிரே திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.இன்னும் சில தினங்களில் நடைபெற இருந்த திருமணத்திற்கு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்த நிலையில் மணமகன் இறந்தது இருவரது குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை