உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / நகரமன்ற தலைவரின் மகன் பைக் விபத்தில் பரிதாப பலி

நகரமன்ற தலைவரின் மகன் பைக் விபத்தில் பரிதாப பலி

வந்தவாசி : வந்தவாசியில், நகரமன்ற தலைவரின் மகன், பைக் விபத்தில் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரமன்ற தலைவரான, தி.மு.க.,வை சேர்ந்த ஜலால் என்பவரின் மகன் அப்துல்சுபைது, 21; இவரது நண்பர் ஜாபர், 20; இருவரும் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு பிருதுார் - திண்டிவனம் சாலையை இணைக்கும் பைபாஸ் சாலை வழியாக, ஹோண்டா பைக்கில் சென்றனர். வழியில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால், சாலை குறுக்கே மண்மேடு அமைத்திருந்தனர். இதை கவனிக்காமல் சென்றதில், நிலை தடுமாறி பைக்கிலிருந்து சாலையில் விழுந்ததில், அப்துல் சுபைது படுகாயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அன்று மாலை, 6:00 மணிக்கு உயிரிழந்தார். வந்தவாசி தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை