உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பைக் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, பைக் மீது, லாரி மோதியதில், இருவர் உயிரிழந்தனர். திருவண்ணாலை மாவட்டம், வேட்டவலம் அருகே ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 32. வேலுார் அருகே நரியாம்பட்டு துணை மின்நிலைய கேங்மேன்.கடந்த 28ம் தேதி சொந்த ஊர் சென்றார். மீண்டும் பணிக்கு செல்ல, நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணிக்கு நண்பர் கோபால், 35, என்பவரை, வேலுார் செல்லும் பஸ் ஏற்றி விடுமாறு கூறினார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் ஹோண்டா பைக்கில், இசுக்கழிகாட்டேரி கிராம கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி, இவர்கள் பைக் மீது மோதியதில், இருவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். வெறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை