உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணிய தீர்த்தவாரி

அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணிய தீர்த்தவாரி

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, உத்தராயண புண்ணிய கால தீர்த்தவாரியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 6ல் உத்தராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தாமரை குளக்கரையில் விநாயகர், சந்திரசேகரர் நேற்று காலை எழுந்தருளினர். பின் தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதன் பின் இரு சுவாமிகளும் வீதியுலா கொண்டு செல்லப்பட்டது. இன்று திருவூடல் வைபவம் நடக்கிறது. இதையொட்டி சுவாமி, அம்மன் கிரிவலம் சென்று, மீண்டும் கோவில் திரும்பும்போது மறுவூடல் நிகழ்ச்சி நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ